MEDIA STATEMENT

கோல லங்காட் நகராண்மைக் கழகத்தில் ஐந்து இந்தியர்களுக்கு வாய்ப்பு

4 ஜனவரி 2023, 3:38 AM
கோல லங்காட் நகராண்மைக் கழகத்தில் ஐந்து இந்தியர்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஜன 4- கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தின் 2023ஆம் ஆண்டு தவணைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் ஐந்து இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கோல லங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் ஹரிதாஸ் ராமசாமி, உதவித் தலைவர் பன்னீர் செல்வம் குப்பன், சிலாங்கூர் மாநில லேனா மகளிர் அமைப்பின் தலைவி உமாநந்தினி, கோல லங்காட் கெஅடிலான் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் கமலநாதன் செல்லப்பன மற்றும் ஜசெக சார்பில் நடேசன் சுப்பிரமணி ஆகியோர் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஹரிதாஸ், பன்னீர் செல்வம் மற்றும் நடேசன் ஆகியோர் கடந்த தவணையிலும் நகராண்மைக் கழக உறுப்பினர் பதவியை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டில் நகராண்மைக் கழக உறுப்பினர் பதவியை வகித்த உமா நந்தினிக்கு 2023ஆம் ஆண்டில் மீண்டும் அப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் கமலநாதன் மட்டுமே புதியவராவார். 

கோல லங்காட் நகராண்மைக் கழகத் தலைமையகத்தில் நாளை நடைபெறும் நியமனச் சடங்கில் 2023ஆம் ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நகராண்மைக் கழக உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்ளவிருக்கின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.