ஷா ஆலம், ஜன 1 - சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட 221 பகுதிகளில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் நீர் விநியோகம் முழுமையாக சீரடைந்துள்ளது.பெட்டாலிங்கில் உள்ள 64 பகுதிகள், உலுலங்காட்டில் 29 பகுதிகள், சிப்பாங்கில் 119 பகுதிகள் மற்றும் கோல லங்காட்டில் ஒன்பது பகுதிகளில் நீர் விநியோகம் சீரடைந்துள்ளதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
இந்த திட்டமிடப்படாத நீர் விநியோக இடையூறு காலத்தில் வாடிக்கையாளர்களின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பிற்கு ஆயர் சிலாங்கூர் நன்றி தெரிவிக்க விரும்புகிறது என்று அது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.
ஜெண்டராம் ஹிலிர் மூல நீர் நிலையத்திலிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையான கண்காணிப்பு இடத்தில் நீரில் மாசு இருப்பதை சிலாங்கூர் நீர் மேலாண்மை நேற்று வாரியம் (லுவாஸ்) கண்டறிந்தது இதன் விளைவாக இரவு 9 00 மணிக்கு சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன.
கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி நெகிரி செம்பிலானில் உள்ள இலிட் நெடுஞ்சாலையில் வாசனைத் திரவியத்தை ஏற்றிச் சென்ற லோரி விபத்தில் சிக்கியதால் அதிலிருந்து கசிந்த திரவியம் வடிகால்கள் வழியாக நீர் ஆதாரப் பகுதியை சென்றடைந்தது.
ECONOMY
இன்று நண்பகல் 12.00 மணியளவில் 221 இடங்களில் நீர் விநியோகம் சீரடைந்தது
1 ஜனவரி 2023, 8:19 AM


