ALAM SEKITAR & CUACA

மன நோயாளி மரணம் தொடர்பில் அந்நிய நாட்டுப் பிரஜை கைது

30 டிசம்பர் 2022, 3:22 AM
மன நோயாளி மரணம் தொடர்பில் அந்நிய நாட்டுப் பிரஜை கைது

கோலாலம்பூர், டிச 30- புக்கிட் பெருந்தோங்கில் உள்ள மன நோயாளிகள்

காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த மன நோயாளி ஒருவர் கடந்த

செவ்வாய்க் கிழமை மரணமடைந்தது தொடர்பில் அந்நிய பிரஜை ஒருவரை

போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த காப்பகத்தின் பணியாளரான 33 வயது ஆடவர் நேற்று

விடியற்காலை 1.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக உலு சிலாங்கூர்

மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சுஃபியான் அப்துல்லா

கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த காப்பகத்திலுள்ள அறை ஒன்றில் 52

வயதுடைய நபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கிடந்தது தொடர்பாக

அதன் பணியாளர் ஒருவரிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் அந்த

சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்த காப்பகத்தில் தங்கியிருந்த மனநோயாளியான அந்த பாதிக்கப்பட்ட

நபர் உடனடியாக ராசா சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்,

எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக  தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து

அவரது உடல் பரிசோதனைக்காக  சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று  சுஃபியான் சொன்னார்.

 கனமான பொருளால் தாக்கப்பட்டதற்கான அறிகுறியாக அவ்வாடவரின்

கை மற்றும் கால்களில் வீக்கம் காணப்பட்டதாகவும் இச் சம்பவத்திற்கான

காரணத்தை கண்டறிவதற்காக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்

அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.