ANTARABANGSA

உக்ரேன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர ரஷியா விருப்பம்

29 டிசம்பர் 2022, 3:44 AM
உக்ரேன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர ரஷியா விருப்பம்

மாஸ்கோ, டிச 29 - உக்ரேனில் நிலவும் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் போரை விரைவில்

முடிவுக்குக் கொண்டுவரவும் ரஷ்யா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் செர்ஜி

லாவ்ரோவ் புதன்கிழமை தெரிவித்தார்.

ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பது மாஸ்கோவின் முன்னுரிமை என்று ரஷிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் லாவ்ரோவ் கூறியதாக

அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். மேற்கத்திய

நாடுகள் திட்டமிட்டு உக்ரேன் மூலம் எங்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட இந்த போரை

முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

போர் மண்டலங்களில் இன்னும் எஞ்சியிருக்கும் வீரர்கள் மற்றும் பொது

மக்களின் உயிர் எங்களுக்கு முக்கியம். எவ்வாறாயினும், மேற்கு நாடுகளுடன்

பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவிற்கு விருப்பம் இல்லை என்று லாவ்ரோவ் குறிப்பிட்டார்.

குறிப்பாக, மேற்கத்திய அரசியல்வாதிகள் ஐரோப்பாவில் பாதுகாப்பு ரஷ்யாவிற்கு எதிராக

கட்டமைக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.