ALAM SEKITAR & CUACA

இன்று மாலை நேரங்களில் பல மாநிலங்களில் மழை பெய்யும்

17 டிசம்பர் 2022, 8:41 AM
இன்று மாலை நேரங்களில் பல மாநிலங்களில் மழை பெய்யும்

ஷா ஆலம், டிச.17: இன்று முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் பருவமழை தொடர்ந்து கிழக்குக் கடலோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

பிற்பகலில் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், கெடா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

"மாலையில், பேராக் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், கெடா, பினாங்கு, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனத் தேசியப் பேரிடர் மேலாண்மை (நட்மா) முகநூலின் மூலம் தெரிவித்தது.

இதற்கிடையில், இன்று காலை மணி 7 நிலவரப்படி, பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் திறக்கப்பட்ட 15 தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) 2,097 பேர் இன்னும் தங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மாறவில்லை.

திராங்கானு, பகாங், ஜோகூர், பேராக் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.