HEALTH

கடந்த வாரம் டிங்கி சம்பவங்கள் 3.3 விழுக்காடு குறைந்தன - ஐவர் மரணம்

15 டிசம்பர் 2022, 10:02 AM
கடந்த வாரம் டிங்கி சம்பவங்கள் 3.3 விழுக்காடு குறைந்தன - ஐவர் மரணம்

புத்ராஜெயா, டிச 15- இம்மாதம் 4 முதல் 10ஆம் தேதி வரையிலான 49வது

நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 3.3

விழுக்காடு குறைந்து 1,871ஆகப் பதிவாகியுள்ளது.

கடந்த 48வது நோய்த் தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 1,935ஆக

இருந்ததாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர்

ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

டிங்கி காய்ச்சல் காரணமாகக் கடந்த வாரம் ஐவர் மரணமடைந்ததாக கூறிய

அவர், பேராக், சிலாங்கூர், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில்

இச்சம்பவங்கள் பதிவாகின என்றார்.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் 19 பேர் டிங்கி காய்ச்சலால் பலியான

வேளையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது

என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 902 டிங்கி சம்பவங்கள் கடந்த

வாரம் பதிவான வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சபா (241),

கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா 188), ஜொகூர் (172) உள்ளன என்றார்

அவர்.

கடந்த வாரம் 53ஆக இருந்த டிங்கி பரவல் பரவல் அபாயம் அதிகம் உள்ள

இடங்களின் எண்ணிக்கை இவ்வாரம் 53ஆக குறைந்துள்ளன. அவற்றில் 26

இடங்கள் சிலாங்கூரிலும் ஐந்து இடங்கள் கோலாலம்பூர் மற்றும் புத்ரா

ஜெயாவிலும் மூன்று இடங்கள் பினாங்கிலும் உள்ளன என்று அவர்

மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.