HEALTH

இந்த சனிக்கிழமை இலவசச் சுகாதாரப் பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்றம்

15 டிசம்பர் 2022, 2:37 AM
இந்த சனிக்கிழமை இலவசச் சுகாதாரப் பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்றம்

ஷா ஆலம், டிச 15: பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்றம் (DUN) இந்த சனிக்கிழமை இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

அசுந்தா பெட்டாலிங் ஜெயா மருத்துவமனையுடன் இணைந்து இந்நிகழ்ச்சி காலை மணி 8.30 முதல் மதியம் மணி 12 வரை நடைபெறும் என அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்தார்.

"இந்த திட்டம் மலேசியக் குடிமக்கள் மற்றும் கம்பங் சுங்கை காயு அராவில் வசிப்பவர்களில் RM2,500 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் கொண்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

ஆர்வமுள்ளவர்கள் முழுமையான ஆவணங்களுடன் http://tiny.cc/KlinikKayuAra என்ற இணைத்தளப் பக்கத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

அசுந்தா  மருத்துவமனையின் SWOP அட்டைக்கு (சமூக நல வெளிநோயாளர் திட்டம்) விண்ணப்பிக்க விரும்புவோர், உங்கள் சம்பளச் சீட்டின் நகல் அல்லது மாத வருமானச் சான்று அல்லது சமூக நலத் துறையின் (JKM) உறுதிப்படுத்தல் கடிதத்தை இணைக்கவும்.

மேலும் தகவலுக்கு நீங்கள் 016-6849371 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.