ALAM SEKITAR & CUACA

வேலைவாய்ப்பு கார்னிவலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது 

10 டிசம்பர் 2022, 12:57 PM
வேலைவாய்ப்பு கார்னிவலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது 

சுபாங் ஜெயா, டிச 10 : செர்டாங்கில் உள்ள மலேசியன் வேளாண்மை எக்ஸ்போ பார்க்கில் (மேப்ஸ்) நடைபெற்ற சிலாங்கூர் மெகா வேலைவாய்ப்பு கார்னிவலின் இரண்டாவது நாளான இன்று காலை மணி 11 நிலவரப்படி 2,000க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

ஊக்கமளிக்கும் ஆதரவை பார்க்கும்போது, ​​நாளை கடைசி நாள் வரை 10,000 வருகையாளர்களின் இலக்கை எட்ட முடியும் என்று மனித மூலதன மேம்பாட்டு எஸ்கோ முகமட் கைருடின் ஓத்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“30,000 வேலை வாய்ப்புகளுடன் 300 நிறுவனங்கள் இருப்பதால், சிலாங்கூர் மக்களும், வெளி மாநில மக்களும் இன்றும் நாளையும் இந்த நிகழ்வுக்கு வருவதை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்றார்.

"இந்த வேலை வாய்ப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் (OKU) திறக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்தத் தரப்பினர் அணுகுவதற்கு நான்கு மொழிபெயர்ப்பாளர்களும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

இன்று இந்நிகழ்வின் அரங்கை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வியை மேற் கொள்வதில் ஆர்வம் காட்டாத இளைஞர்களைப் பற்றி கருத்து தெரிவித்த கைருதீன், வேலை தேடுவதற்கு முன் அவர்களின் திறன்களை ஆராயுமாறு அறிவுறுத்தினார்.

"சிலாங்கூர் மாநில அரசு தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (STDC) மற்றும் சிலாங்கூர் ஸ்மார்ட் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் நிபுணத்துவ முன்முயற்சி (IKTISASS) ஆகியவை உருவாக்கி உள்ளது என்றார்.

இந்த திட்டம் வெற்றிகரமாக 1,996 நபர்களுக்கு வேலை கிடைக்க உதவியது. ஆர்வமுள்ளவர்கள் கூடுதல் தகவல்களைப் பெற www.selangorjobportal.com.my என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.