ஆலம், டிச 9- நாட்டில் நேற்று புதிதாக 1,616 கோவிட்-19 சம்பவங்கள்உறுதிப்படுத்தப்பட்ட வேளையில் மேலும் நால்வர் இந்நோய்க்குப் பலியாகினர்.
இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு
ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 6 ஆயிரத்து 855 ஆக
அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
மலேசியாவில் தற்போது 21,473 கோவிட்-19 பேர் நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தை
எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வேளையில் இதில் 58 பேருக்குச் சுவாச உதவி தேவைப்படுகிறது.
இந்நோய்த் தொற்றிலிருந்து நேற்று 2,145 பேர் குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 48 ஆயிரத்து 640ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நோய்த் தொற்றுடன் தொடர்புடைய நான்கு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவான. இதனுடன் சேர்த்து மொத்த இறப்பு எண்ணிக்கை 36,742 ஆக உயர்ந்துள்ளது.
மாநில ரீதியாக கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
சிலாங்கூர்: 474 பேர்
கோலாலம்பூர்: 154 பேர்
சரவாக்: 144 பேர்
பினாங்கு: 130 பேர்
கெடா: 104 பேர்
மலாக்கா: 96 பேர்
நெகிரி செம்பிலான்: 83 பேர்
சபா: 82 வழக்குகள்
பேராக்: 77 பேராக்
புத்ராஜெயா: 75 பேர்
கிளந்தான்: 51 பேர்
பகாங்: 44 பேர்
திரங்கானு: 42 பேர்
ஜோகூர்: 30 பேர்
லாபுவான்: 19 பேர்
பெர்லிஸ்: 10 பேர்
HEALTH
நாட்டில் நேற்று 1,616 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு- நால்வர் மரணம்
9 டிசம்பர் 2022, 8:37 AM


