ECONOMY

பிளாசா ஷா ஆலமில் நாளை எம்.பி.எஸ்.ஏ.வின் நடமாடும் முகப்பிடச் சேவை

9 டிசம்பர் 2022, 4:03 AM
பிளாசா ஷா ஆலமில் நாளை எம்.பி.எஸ்.ஏ.வின் நடமாடும் முகப்பிடச் சேவை

ஷா ஆலம், டிச 9- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.) ஏற்பாட்டிலான நடமாடும் முகப்பு சேவை இங்குள்ள செக்சன் 9, பிளாசா ஷா ஆலமில்  நாளை  10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

‘ஷா ஆலம் ஒன் வீல்ஸ்‘ எனப்படும் இந்த சேவை காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட பணிகளை அலுவலகத்திற்கு வராமல் வார இறுதி நாட்களில் கவனிப்பதற்கு ஏதுவாக இந்த நடமாடும் முகப்பிடச் சேவை ஏற்படுத்தப்

பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மதிப்பீட்டு வரியைச் சரி பார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிடஅபராதங்களை செலுத்துவது, புகார்களை தெரிவிப்பது மற்றும் லைசென்ஸ் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்வது உள்ளிட்ட பணிகளை இந்த நடமாடும் முகப்பிடத்தில் பெறலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்துவது உள்ளிட்ட பணிகளை

பொதுமக்கள் எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக இத்தகைய நடமாடும் முகப்பிடச் சேவைகளை மாநகர் மன்றம் இதற்கு முன்னர் பல இடங்களில் நடத்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.