ANTARABANGSA

மூன்று பாலஸ்தீனர்கள் படுகொலை- இஸ்ரேலுக்கு ஓ.ஐ.சி. கண்டனம்

9 டிசம்பர் 2022, 3:46 AM
மூன்று பாலஸ்தீனர்கள் படுகொலை- இஸ்ரேலுக்கு ஓ.ஐ.சி. கண்டனம்

இஸ்தான்புல், டிச 9 - ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான ஜெனினில்

இஸ்ரேலியப் படைகளால் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை இஸ்லாமிய மாநாட்டு நிறுவனம் (ஓ.ஐ.சி.) கண்டித்துள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் தாக்குதல்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதோடு அக்கொடூரச் செயல்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று ஓ.ஐ.சி. அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளதாக

அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களைத் தடுக்கவும் மற்றும் பாலஸ்தீன

மக்களுக்குச் சர்வதேச பாதுகாப்பை வழங்கவும் சர்வதேசச் சமூகம் மற்றும் ஐக்கிய

நாடுகள் சபை (ஐ.நா.) முன்வர வேண்டும்  அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அரபு லீக்கின் உதவி பொதுச்செயலாளர் சயீத் அபு அலி பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களை கண்டித்துள்ளார்.

இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களை கண்டித்தால் போதாது என்று அபு அலி  அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக தினமும் குற்றங்களைச் செய்து வருவதாக கூறிய அவர், மரணதண்டனை, தடுப்புக்காவல், வீடுகளை இடித்தல் மற்றும் அப்பாவி பொதுமக்களை மிரட்டுதல் ஆகியவையும் அக்குற்றங்களில்  அடங்கும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.