ECONOMY

உள்ளூர் படைப்புகளைப் பிறமொழிகளில் மொழிபெயர்ப்பதற்குச் சிறப்பு மானியம் வழங்க அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது

8 டிசம்பர் 2022, 8:10 AM
உள்ளூர் படைப்புகளைப் பிறமொழிகளில் மொழிபெயர்ப்பதற்குச் சிறப்பு மானியம் வழங்க அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது

ஷா ஆலம், டிச.8: உள்ளூர் படைப்புகளை வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பக நிறுவனங்களுக்குச் சிறப்பு மானியம் வழங்க அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் பொது நூலகக் கூட்டு மேலாண்மை (பிபிஏஎஸ்) இயக்குநர், இத்திட்டம் மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளை மேம்படுத்தி, உலகத்தின் பார்வையில் நாட்டின் பெயரை உயர்த்தும் என நம்பப்படுகிறது என்றார்.

"உதாரணமாக, உள்ளூர் புத்தகங்களை ஜெர்மன், துருக்கி, கொரிய மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கலாம், இது பல சுற்றுலாப் பயணிகளை நம் நாட்டிற்கு, குறிப்பாக சிலாங்கூருக்கு வர மறைமுகமாக ஊக்குவிக்கிறது.

கல்வியின் வழி வருமானம் என்ற முழக்கத்திற்கு ஏற்ப தேசியப் புத்தகத்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைய பிரார்த்திக்கிறோம் என டத்தின் பாதுகா மஸ்துரா முஹமட் இன்று தெரிவித்தார்.

இங்குள்ள ஷா ஆலம் சிட்டி கவுன்சில் கன்வென்ஷன் சென்டரில் சந்தித்த போது அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடத்தில் வாசிப்புப் ஆர்வத்தை வளர்க்கும் படி அறிவுறுத்தினார்.

"குழந்தைகள் எல்லா நேரத்திலும் கேஜெட்களை வைத்திருக்காமல் புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்; எதிர்காலத்தில் அவர்கள் நல்ல வாசகர்களாக மாறலாம்.

“அதன் பிறகு அவர்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த விஷயம் முக்கியமானது, ஏனென்றால் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் நமது கலாச்சாரத்தைப் பற்றி அறிய உள்ளூர் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.