ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 29 பேர் இன்னும் மீட்பு மையத்தில் உள்ளனர்

7 டிசம்பர் 2022, 8:54 AM
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 29 பேர் இன்னும் மீட்பு மையத்தில் உள்ளனர்

ஷா ஆலம், டிசம்பர் 7: வெள்ளம் படிப்படியாக மீண்டு பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பத் தொடங்கியதால் சிலாங்கூர் மற்றும் பேராகில் தலா ஒரு தற்காலிக தங்கும் மையம் மூடப்பட்டது.

நேற்று பிற்பகல் மணி 4 நிலவரப்படி, சிலாங்கூர், பேராக் மற்றும் பெர்லிஸ் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆகக் குறைந்துள்ளதாக முகநூலின் மூலம் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தெரிவித்துள்ளது.

11 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 29 பேர் சிலாங்கூரில் உள்ள ஒரு வெளியேற்ற மையத்திலும், 58 பேர் பேராக்கிலும், நான்கு பேர் பெர்லிஸ்சில் தங்கியுள்ளனர்.

நேற்று காலை, மூன்று மாநிலங்களில் செயல்படும் ஐந்து தற்காலிக தங்கும் மையங்களில் மொத்தம் 288 பேர் தஞ்சமடைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.