ALAM SEKITAR & CUACA

பூச்சோங்கில் நிலச்சரிவு-  வாகனங்கள் சேதம்

4 டிசம்பர் 2022, 5:08 AM
பூச்சோங்கில் நிலச்சரிவு-  வாகனங்கள் சேதம்

ஷா ஆலம், டிசம்பர் 4- பூச்சோங்கில் நேற்றிரவு நிகழ்ந்த  இரண்டு நிலச்சரிவுகளில்  பல வாகனங்கள் சேதமடைந்தாக  ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

புசாட் பண்டார் பூச்சோங்கில் உள்ள  சரகா அபார்ட்மென்ட் மற்றும் ஸ்ரீ பெனாகா அபார்ட்மென்ட் ஆகிய குடியிருப்புகளில்  இந்நிலச்சரிவு ஏற்பட்டதாக அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

சரகா அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு வாகனங்களும் ஸ்ரீ பினாங்கா குடியிருப்பில் ஒரு வாகனமும் மண்சரிவினால் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று அவர் சொன்னார்.

டேவான் செர்பகுணா லாமான் புத்ரியில் ஒரு தற்காலிக நிவாரண மையத்தை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் திறந்தது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மையத்திற்கு வராததால் அது பின்னர் மூடப்பட்டது என்று அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மலைச் சாரல்கள் மீது ஆய்வு  பேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று  இங் மேலும் குறிப்பிட்டனர்.

நிலச்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கையாக மலைச் சரிவுகள்  கேன்வாஸ்கள் பைகளால் மூடப்படும். மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களும் அகற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.