ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் மாலை மணி 6 வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது

30 நவம்பர் 2022, 9:27 AM
சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் மாலை மணி 6 வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், நவ. 30: சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மாலை மணி 6 வரை இடியுடன் கூடிய மழையும்  பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அவ்விடங்கள் உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நெகிரி செம்பிலான், கெடா, பேராக், திராங்கானு, பகாங், சரவாக், சபா, பினாங்கு, கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களும் அதில் அடங்கும்.

மேலும் தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைஇப் பார்க்கவும், சமூக ஊடகங்கள் மற்றும் சமீபத்திய தகவல்களுக்கு myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.