ECONOMY

சிலாங்கூர் நூலகக் கழக ஏற்பாட்டில் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி- டிச.1 முதல் ஷா ஆலமில் நடைபெறும்

30 நவம்பர் 2022, 5:51 AM
சிலாங்கூர் நூலகக் கழக ஏற்பாட்டில் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி- டிச.1 முதல் ஷா ஆலமில் நடைபெறும்

ஷா ஆலம், நவ 30- சிலாங்கூர் அனைத்துலக புத்தகக் க் காட்சி 2022 வரும்

டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 11 நாட்களுக்கு ஷா ஆலம், செக்சன் 13,

மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் நூலகக் கழகத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக

நடைபெறும் இந்தப் புத்தக கண்காட்சியில் இங்கிலாந்தின் புளும்ஸ்பெரி

மற்றும் வில்லி, இந்தோனேசியாவின் பிராண்ட் மீடியா போன்ற பிரசித்தி

பெற்றப் புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.

இந்த கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த புத்தக

வெளியீட்டாளர்கள் மற்றும் பதிப்பகத்தாரைச் சந்திப்பதற்குரிய வாய்ப்பு

உள்ளூர் புத்தகப் பிரியர்களுக்கு ஏற்படும்.

இந்தக் கண்காட்சியில் உள்நாட்டு புத்தக வெளியீட்டாளர்களும்

பங்கேற்கவுள்ளனர். இந்த கண்காட்சியில் திறனை வெளிப்படுத்தும்

மையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகத்திற்கான முழுமையான

எழுத்துப் படிவங்களை வைத்திருப்போர் தங்களுக்குப் பொருத்தமான புத்தக

வெளியீட்டாளர்களை இங்கு தேடிக் கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.