ECONOMY

2030ஆம் ஆண்டுக்குள் கிள்ளானை விவேக நகரமாக்கும் திட்டத்திற்குப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

30 நவம்பர் 2022, 4:58 AM
2030ஆம் ஆண்டுக்குள் கிள்ளானை விவேக நகரமாக்கும் திட்டத்திற்குப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
2030ஆம் ஆண்டுக்குள் கிள்ளானை விவேக நகரமாக்கும் திட்டத்திற்குப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

ஷா ஆலம், நவ 30- வரும் 2030ஆம் ஆண்டுக்குள் கிள்ளானை விவேக நகரமாக்குவது தொடர்பான செயல்திட்டத்திற்கு ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன்வைக்க பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.

திறன்மிக்க நிர்வாகத்திற்கு கிள்ளான் நகராண்மைக் கழகத்தை தயார் படுத்துவது மற்றும் விவேக நகர உருமாற்றத்திற்கு ஏதுவாக அதன் பணியாளர்களுக்கு திறனளிப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிள்ளான் நகராண்மைக் கழகம் கூறியது.

வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில்  கிள்ளானை விவேக நகராக உருவாக்கும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக மேம்பாட்டுத் திட்டங்களை வடிவமைப்பதில் அரசு நிறுவனங்களுக்கு இந்த செயல் திட்டம் வழிகாட்டியாக விளங்கும் என அது தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

கிள்ளான் நகரிலும் வெளியிலும் வசிப்பவர்கள், கிள்ளானில் வேலை செய்பவர்கள் மற்றும் அந்நிய பிரஜைகள் இந்த ஆய்வில் கலந்து கொள்ளலாம் என்றும் அது தெரிவித்தது.

இந்த ஆய்வு தொடர்பான கேள்விகள் அடங்கிய பாரங்களை எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம். நவம்பர் 28 முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை அந்த ஆய்வு நடைபெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.