ஷா ஆலம், நவ 30- மலேசியாவில் நேற்று 1,672 புதிதாக கோவிட்-19 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள வேளையில் 10 பேர் இந்நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.இப்புதிய தொற்றுகளுடன் சேர்த்து மலேசியாவில் கோவிட்-29 நோய்த் தொற்றுக்கு இலக்காவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 90 ஆயிரத்து 431ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மிக அதிகமாக 619 கோவிட்-19 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவான வேளையில் கோலாலம்பூரில் 134 பேரும் கெடாவில் 133 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர்.
நேற்று 10 பேர் கோவிட்-19 நோயால் உயிரிழந்த வேளையில் இந்நோய்க்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,667 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நேற்று 2,722 கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன்
சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 27 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.
மாநில வாரியாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
-சிலாங்கூர்: 619
-கோலாலம்பூர்: 134
-கெடா: 133
-சபா: 103
கிளந்தான்: 77
-மலாக்கா: 89
-பினாங்கு: 81
-சரவாக்: 80
-பேராக்: 66
-பகாங்: 46
-நெகிரி செம்பிலான்: 84
-திரெங்கானு: 57
-புத்ராஜெயா: 52
-ஜோகூர்: 39
-லாபுவான்: 9
-பெர்லிஸ்: 3
HEALTH
நாட்டில் நேற்று 1,672 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு
30 நவம்பர் 2022, 4:42 AM


