அடுக்கி வைக்கப்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்து சிறுவன் பலி- கெடாவில் சம்பவம்

30 நவம்பர் 2022, 2:46 AM
அடுக்கி வைக்கப்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்து சிறுவன் பலி- கெடாவில் சம்பவம்

அலோர்ஸ்டார், நவ 30- கட்டுமானப் பகுதி ஒன்றில் குவியலாக அடுக்கி

வைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள் சரிந்து விழுந்த சம்பவத்தில் அதன்

மீது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் பரிதாபமாக

உயிரிழந்தான்.

இச்சம்பவம் குபாங் பாசு அருகே உள்ள புக்கிட் காயு

ஹீத்தாம், கம்போங் பெலுக்கார் சங்லுனில் நேற்று நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 5.33 மணியளவில் தங்களுக்குத்

தகவல் கிடைத்ததாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்

தலைமை உதவி ஆணையர் சயானி சைடோன் கூறினார்.

அடுக்கி வைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததாகக் கெடா

மாநில நடவடிக்கை அறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த மின் கம்பங்கள்

மீது சிறார்கள் ஏறி விளையாடிக் கொண்டிருந்த போது இச்சம்பவம்

நிகழந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் சொன்னார்.

சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் விரைந்த போது பொது மக்கள்

மண்வாரி இயந்திரத்தைக் பயன்படுத்தி சிறுவர்களை இடிபாடுகளிலிருந்து

மீட்டு விட்டனர். சுயநினைவிழந்த நிலையில் காணப்பட்ட இரு சிறார்கள்

உடனடியாக ஜித்ரா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திலேயே உயரிழந்த சிறுவனின் உடல் மேல்

நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர்

அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.