HEALTH

உடல்நலப் பரிசோதனை, இலவச சானிட்டரி நாப்கின்கள் ஆகியவை B40 வர்க்க மகளீருக்குப் பெரிய அர்த்தத்தைத் தருகிறது.

27 நவம்பர் 2022, 10:44 AM
உடல்நலப் பரிசோதனை, இலவச சானிட்டரி நாப்கின்கள் ஆகியவை B40 வர்க்க மகளீருக்குப் பெரிய அர்த்தத்தைத் தருகிறது.

ஹூலு லங்காட், நவ 27; சிலாங்கூர் பட்ஜெட் 2023-ல் மாநில அரசு சுகாதார பரிசோதனைக்கான ஒதுக்கீடு குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு  சிறந்த அர்த்ததை அளிக்கிறது.

63 வயதான வர்த்தகர் அஜிசின் சம்சி கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர்கள் சில சமங்களில் கிளிக்கில் உடல்நலப் பரிசோதனை செய்து கொள்ளும் தங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யவில்லை, ஏனெனில் அவர்கள் அதைச் செய்து கொள்ளும் அளவு வசதி இல்லை. அவர்களிடம் உள்ள பணம் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

எனவே இலவச சுகாதார பரிசோதனை சேவையை வழங்கும் சிலாங்கூர் சாரிங் போன்ற சுகாதார உதவிகள் ஏழைகளுக்கு  நல்ல உதவி திட்டம்  அர்த்தமுள்ள சேவையாகும்.   மேலும், மக்களின் சுகாதாரத்தில் அவர்களுக்கு அக்கறையை  ஏற்படுத்த விழைகிறது என அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இல்லத்தரசி , நூர் ஷாவிஷாக் (31), சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவது ஒரு புத்திசாலித்தனமான யோசனையாகும் என்கிறார். இதுபோன்ற ஏற்பாடுகள் மூலம், சானிட்டரி நாப்கின்களை அடிக்கடி மாற்றுவதால் மற்ற நோய்கள் வருவதற்கான ஆபத்து உட்பட பல விஷயங்களைத் தடுக்கலாம். மற்றொரு இல்லத்தரசி நோரிசான் (53), உடல்நலத்தை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் செலவுகளைத் தவிர்க்கலாம் என்கிறார்.

டத்தோ மந்திரி புசார், நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல சுகாதார அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது, இல்திசம் சிலாங்கூர் சிஹாட், பாண்டுவான் சிஹாத் சிலாங்கூர், சிலாங்கூர் மாநில இதய சிகிச்சை திட்டம் ஆகும்.

இதில் இல்திசம் சிலாங்கூர் சிஹாத் அரசு ஊழியர்கள், சிலாங்கூர் சாரிங், சிலாங்கூர் புற்றுநோய், சிலாங்கூர் மென்டல் சிஹாத், சிலாங்கூர் அனாக் சிஹாத் திட்டம், விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் போன்றவையும் அடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.