ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் ஜனவரி மாதத்தில் இருந்து 31,822 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

27 நவம்பர் 2022, 8:30 AM
சிலாங்கூரில் ஜனவரி மாதத்தில் இருந்து 31,822 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஷா ஆலம், 27 நவ: சிலாங்கூரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 19 வரை மொத்தம் 31,822 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி ங்காடிமான் தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிட்டால், முன்பு 13,745 சம்பவங்களாக இருந்தது 18,077 சம்பவங்களாக அதிகரித்துள்ளது, அல்லது 131.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று டாக்டர் ஷாரி கூறினார்.

"2022 நவம்பர் 13 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் 46 வாரத்தில், சிலாங்கூரில் மொத்தம் 744 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

பெட்டாலிங் (10,927 சம்பவங்கள்), உலு லங்காட் (7,444 சம்பவங்கள்), கிள்ளான் (5,405 சம்பவங்கள்), கோம்பாக் (4,308 சம்பவங்கள்) ஆகிய நான்கு மாவட்டங்களில் டிங்கி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றார்.

"இந்த ஆண்டு சிலாங்கூரில் டிங்கி காய்ச்சலுக்கு எட்டு இறப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, உலு லங்காட் மாவட்ட சுகாதார மையத்தில் (பிகேடி) நான்கு பேர், பெட்டாலிங் பிகேடியில் இரண்டு பேர், உலு சிலாங்கூர் பிகேடி மற்றும் கோலா லங்காட் பிகேடி தலா ஒரு சம்பவம் பதிவு," என்று அவர் கூறினார்.

இது சம்பந்தமாக, டாக்டர் ஷாரி, குடியிருப்பு பகுதியில் உள்ள ஒவ்வொரு சமூகமும் ஏடிஸ் கொசு உற்பத்தி தளங்களை தொடர்ந்து சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஏனெனில் அடிக்கடி மழை பெய்யும் காலநிலை நீர் தேங்க கூடிய இடத்தை அதிகரிக்கிறது.

ஈரப்பதமான சூழல்களும் ஏடிஸ் கொசுக்களின் உயிர்வாழ்வை அதிகரிக்கின்றன என்றார்.

"சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சமூகங்கள் வாரத்திற்கு 10 நிமிடங்களை செலவழித்து, பயன்படுத்தப்படாத அனைத்து நீர்த் தேக்கங்களும் அழிக்கப்படுவதை உறுதிசெய்ய பரிந்துரைக்கிறது.

மேலும், "வீட்டின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறம் எப்போதும் தூய்மையாக இருப்பதையும், நீர் தேக்கம் இல்லாதவாறும் இருப்பதையும், அழிக்க முடியாத நீர்த்தேக்கத்தில் லார்வாக்களை அழிக்கும் மருந்து போட்டு, நிரந்தர நீர் வைக்கும் பாத்திரங்கள் இறுக்கமாக மூடுவதையும் பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.