ECONOMY

கிக் ‘’துரித பட்டுவாடா’’ சேவை தொழில் நடத்துனர்கள் மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கான உதவிக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6 வரை திறந்திருக்கும்

27 நவம்பர் 2022, 6:13 AM
கிக் ‘’துரித பட்டுவாடா’’ சேவை தொழில் நடத்துனர்கள் மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கான உதவிக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6 வரை திறந்திருக்கும்

ஷா ஆலம், நவ 27: கிக் "துரித பட்டுவாடா’’ சேவை தொழில் நடத்துனர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன் பணத்துடன் கூடிய பைக் கேர்-1000 திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் வரும் டிசம்பர் 6-ம் தேதி வரை திறந்திருக்கும்.

சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை (யுபிபிஎஸ்) இந்தத் திட்டம், தேவைப்படும் கிக் (p-hailing) "துரித பட்டுவாடா’’ சேவை தொழில் நடத்துனர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசாங்கத்தின் முன்முயற்சி என்று தெரிவித்தது.

"கிக் தொழில் துறையில் ஈடுபட விரும்பும் தொழிலாளர்களின் சுமையை குறைக்க மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கு முன் பண உதவி வழங்கப்படுகிறது.

"விண்ணப்பத் தகுதித் தேவைகளில் விண்ணப்பதாரர் சிலாங்கூர் குடிமகனாகவும், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர், செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் உரிமம் பெற்றவர் மற்றும் CTOS/CCRIS ஆல் நிதித்துறை கருப்புப் பட்டியலில் இடபெறாதவராக" இருக்க வேண்டும் என்று பேஸ்புக் வழியாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழுமையான விண்ணப்பப் படிவம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை டிசம்பர் 7 ஆம் தேதிக்கு முன் கிழக்கு நுழைவாயில், ஐடியல் கன்வென்ஷன் சென்டர் (ஐடிசிசி) ஷா ஆலமில் உள்ள யுபிபிஎஸ் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு 016-959 8320 (பதின் ஷபிரா) என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.