ECONOMY

சிலாங்கூர் பட்ஜெட் 2023

25 நவம்பர் 2022, 7:49 AM
சிலாங்கூர் பட்ஜெட் 2023

ஷா ஆலம், நவ 25 - இன்று நவம்பர் 25 ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரும், மாநில மந்திரி புசாருமான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர் மாநில சட்டசபையில் 2023ம் ஆண்டுக்கான மாநில வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில மக்களுக்கும் தனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த மதிப்புமிக்க அவையில் இது அவரின் 5 வது வரவு செலவு அறிக்கை தாக்கல் என்ற அவர், அதற்கு வற்றாத ஆதரவு நல்கிய மாநில செயலாளர், பொருளாளர், தலைமை சட்ட விவகார ஆட்சிக்குழு உறுப்பினர், அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மேற்கில் உலு பெர்ணம் முதல் கிழக்கில் சுங்கை பீலேக் வரை இந்த வரவு செலவு அறிக்கை தயாரிப்புக்கு உறுதுணையாக விளங்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு தனது பட்ஜெட் உரையை துவக்கினார்.

Selangor TV போர்ட்டல் மூலம் நேரடியாக ஒளிபரப்பினை காணலாம்.

பட்ஜெட்  கூட்டம் பற்றிய சமீபத்திய தகவல்கள் selangortv.my இணையதளம் மூலம் விளம்பரப்படுத்தப்படும்.

அதே வேளையில் Facebook மீடியா சிலாங்கூர் மற்றும் அமிருடின் ஷாரியில் நேரடியாகப் பின்தொடரலாம், அதே நேரத்தில் சிலாங்கூர்கினி செய்தித்தாள் மற்றும் போர்டல் மூலம் செய்தி அறிக்கைகளை படிக்கலாம். இது மாண்டரின், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று பதிப்புகளிலும் பற்றிய ஏதேனும் சமீபத்திய தகவல் selangortv.my இணையதளம் மூலம் விளம்பரப்படுத்தப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.