ALAM SEKITAR & CUACA

கிள்ளானில் அதிக அலை முன்னறிவிப்பு, மந்திரி புசார் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

24 நவம்பர் 2022, 8:28 AM
கிள்ளானில் அதிக அலை முன்னறிவிப்பு, மந்திரி புசார் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்
கிள்ளானில் அதிக அலை முன்னறிவிப்பு, மந்திரி புசார் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

ஷா ஆலம், நவ 24- நேற்றிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஏற்படும் உயரமான அலைகள் நிகழ்வு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கிள்ளான் மற்றும் கடல் அருகிலுள்ள குடியிருப்பாளர்களையும் டத்தோ மந்திரி புசார் கேட்டுக்கொண்டார்.

கிள்ளான் மற்றும் அருகில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ``மாநில அரசு தற்போதையே நிலையை கண்காணித்து எந்தவொரு சாத்தியக்கூறுகளுக்கும் தயாராகும்`` என டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி இன்று தனது பேஸ்புக்கில் தெரிவித்தார்.

நேற்று கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு பொதுமக்கள் அதிக அலைகள் ஏற்படும் நிகழ்வு குறித்து விழிப்புடன் இருக்குமாறு நினைவூட்டியது; காரணம் இந்நிகழ்வால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குழுவின் கணிப்புப்படி நவம்பர் 22 முதல் 27 வரை கிள்ளான் மாவட்டத்தை அதிக அலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, கிள்ளான் குடிமக்கள் அனைவரும் அவ்வப்போது நிலைமையை உணர்ந்து விழிப்புடன் இருக்கவும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவசர நிலை ஏற்பட்டால் பேரிடர் தொடர்பு எண் கீழ்வருமாறு:

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.