ஷா ஆலம், நவ 19- நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவரும் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக திகழ்ந்தவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது லங்காவி தொகுதியை தக்க வைத்துக் கொள்வதிலிருந்து தோல்வியைத் தழுவினார்.
பெஜூவாங் கட்சி சார்பில் போட்டியிட்ட அவருக்கு 3,212 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் டத்தோ முகமது சுஹாய்மி அப்துல்லா 16,801 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.


