ஷா ஆலம், நவ 19- தஞ்சோங் காராங் தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் ஜூலகாப்பெரி ஹனாபி 2,180 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
ஜூல்காப்பெரி 18,054 வாக்குகளைப் பெற்ற வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் ஹபிபா முகமது யூசுப்பிற்கும 15,874 வாக்குகளும் மூடா கட்சியின் சித்தி ராஹாயு பாஹ்ரினுக்கு 12,314 வாக்குகளும் கிடைத்தன.


