ஷா ஆலம், நவ 19- கோம்பாக் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னிலை வகிப்பதாக அதிகாரிபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
இரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலின் படி அமிருடின் 17,033 வாக்குகள் பெற்றுள்ளார். பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி பெற்றதை விட இது 5,000 வாக்குகள் அதிகமாகும்.
டாமன்சாரா தொகுதியில் கோபிந்த் சிங் 12,353 வாக்குகளுடன் முதலிடம்
டாமன்சாரா தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் கோபிந்த் சிங் டியோ 12,353 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த தொகுதி பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.


