ECONOMY

சிலாங்கூரில் ஹராப்பான் கூட்டணிக்கு 17 தொகுதிகள்- மெர்டேக்கா சென்டர் கருத்து கணிப்பு கூறுகிறது

19 நவம்பர் 2022, 11:24 AM
சிலாங்கூரில் ஹராப்பான் கூட்டணிக்கு 17 தொகுதிகள்- மெர்டேக்கா சென்டர் கருத்து கணிப்பு கூறுகிறது

ஷா ஆலம், நவ 19 - பிரபல கருத்து கணிப்பு ஆய்வு மையமான மெர்டேக்கா சென்டர் நடத்திய கருத்து கணிப்பில் சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 17 நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நான்கு இடங்களில் தீர்மானிக்க முடியாத அளவுக்கு கடும் போட்டி நிலவுவது அக்கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மேலும், மாநிலத்தின் அனைத்து 22 தொகுதிகளிலும் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் ஒரு இடத்தைக் கைப்பற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 15வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஒட்டுமொத்தமாக 82 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு 43 இடங்களும் பாரிசான் நேஷனலுக்கு 15  இடங்களும் கிடைக்கும் என்றும் மெர்டேக்கா சென்டர் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டி கடுமையாக இருப்பதால் 45 தொகுதிகளில் வாக்கு வேறுபாடு மிகவும் குறுகியதாக இருக்கும் என்று அது மேலும் கூறியது.

சிலாங்கூரில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகளில் வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கக்கூடிய தொகுதிகளாக சுங்கை புசார், தஞ்சோங் காராங், கோல சிலாங்கூர் மற்றும் காப்பார் விளங்குகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.