சிப்பாங், நவ.19 – சிப்பாங், சுங்கை மெராப் லுவார் தேசிய பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் கடும் வெயிலுக்கு மத்தியிலும் வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினர்.
தனக்கான வாக்களிப்பு தருணம் வரும்வரை 3 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நிற்க வேண்டியிருந்ததாக முதன் முறையாக வாக்களிக்க வந்த ஷியாவானி ஹூஸ்னா ஷாபி சைபுல் (வயது 20) கூறினார்.
இதற்கிடையில், இன்று மதியம் 12.30 மணியளவில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோம்பாக் தொழிற்கல்லூரி வாக்குப்பதிவு மையத்தில் நிலைமையை ஆய்வு செய்தார்.



