கிள்ளான், நவ 19 – காப்பார் தொகுதியில் நேற்றிரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக அரசியல் கட்சி வேட்பாளர்களின் குறைந்தது ஐந்து ராட்சத பிரச்சாரப் பலகைகள் சரிந்து விழுந்ததை ஜாலான் காப்பார்-கிள்ளானில் மதியம் 3.20 மணியளவில் சிலாங்கூர்கினி நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
பக்காத்தான் ஹராப்பான் காப்பார் வேட்பாளர் டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமீட் இன்று பிற்பகல் கோல லங்காட்டில் உள்ள மெதடிஸ்ட் தேசிய இடைநிலைப் பள்ளிக்கு வாக்களிக்கச் சென்றார்.
முன்னதாக இன்று காலையில் அவர் தாம் போட்டியிடும் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார்.


