பாங்கி, நவம்பர்.18- மேம்பாடு அடைந்த நகரங்களில் வாழ்ந்தாலும் வறுமையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என பாங்கி தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஷாரேசான் ஜோஹான் கூறினார்.
பாங்கி நாடாளுமன்ற தொகுதியில் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இதில் ஏராளமானோர் இன்னமும் வறுமையில் தான் இருந்து வருகின்றனர்.
இந்த 15ஆவது பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் வறுமை ஒழிப்பு சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதே போன்று, இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
வெள்ளம், பொது போக்குவரத்து, மருத்துவ வசதிகள், சிறு வியாபாரிகளுக்கான உதவி திட்டம் என பல்வேறு முக்கிய அம்சங்களை தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இன்று பண்டார் பாரு பாங்கியில் அமைந்திருக்கும் rumah mesraவில் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஷாரேட்சான் ஜோஹான் கூறினார்.
செய்தி ஆர்.பார்த்திபன்


