ஷா ஆலம், நவ 18- மாநிலம் முழுவதும் நாளை மாலை மழை பெய்யும் என்பதால் காலையிலே வாக்களிக்கச் செல்லும்படி மாநிலத்திலுள்ள அனைத்து 22 தொகுதிகளின் வாக்காளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், காப்பார், கிள்ளான், கோல லங்காட் ஆகிய தொகுதிகளில் நாளை காலை மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.
அதே சமயம், சுங்கை புசார், தஞ்சோங் காராங், கோல சிலாங்கூர், ஷா ஆலம், கோத்தா ராஜா ஆகிய தொகுதிகளில் நாளை வானம் மேகமூட்டமாக காணப்படும். மற்ற இடங்களில் வானிலை நன்றாக இருக்கும் என அது தெரிவித்தது.
எனினும் மாலையில் சுங்கை புசார், கோம்பாக், அம்பாங், செலாயாங், உலு லங்காட், பாங்கி, பூச்சோங், சுபாங், டாமன்சாரா, பெட்டாலிங் ஜெயா, சுங்கை பூலோ, சிப்பாங் ஆகிய தொகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பான விபரங்களை மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அகப்பக்கம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.


