கோம்பாக், நவ 17- கோம்பாக் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தன் இறுதி கட்டம் பிரச்சாரத்தை மோட்டார் சைக்கிளில் மேற்கொண்டார்.
கோம்பாக் கம்போங் கெர்தாஸில் இருக்கும் மக்களிடம் தன் வெற்றி ஆதரவை திரட்ட அவர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தார்.
மேலும் அவர் கூறுகையில் இங்கு இருக்கும் மக்கள் எனக்கு எப்போதும் மகத்தான ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கி வருவார்கள் அதேபோல் எனக்கே வரும் தேர்தலில் வெற்றியை தேடி தருவார்கள் என்று நான் மிக பெரிய அளவில் நம்புகிறேன் என அவர் கூறினார்.
அந்த வேளையில் நான் கோம்பாக் தொகுதியில் கடந்த சில தினங்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன் இந்த வேளையில் நான் செல்லும் இடமெல்லாம் தனக்கு ஆதரவு வழங்கி வந்த அனைத்து மக்களுக்கும் அவர் தம் நன்றியை தெரிவித்தார். அதில் கம்போங் கெர்தாஸில் உள்ள மக்களும் அடங்குவர். மேலும் அவர் கூறுகையில் நிறைய இடங்களில் நிறைய நேரம் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை இருப்பினும், இத்தொகுதியில் வாழும் அனைத்து மக்களின் பிரச்சனைகளையும் நான் அறிவேன் என்று அவர் கூறினார்.
மேலும் விரைவில் கோம்பாக் தொகுதியில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளை நான் வெற்றி பெற்ற பிறகு அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.
ஆர்.பார்த்திபன்


