சிப்பாங், நவ 17- அதிகமான வாக்காளர்களைக் கவர்வதற்குரிய உத்வேகத்துடன் செயல்படுவதற்கு ஏதுவாக சிப்பாங் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் மாவட்ட வாக்களிப்பு மையப் பணியாளர்களைச் சந்தித்தார்.
வாக்காளர்களைக் கவர்வதில் மாவட்ட வாக்களிப்பு மைய பணியாளர்கள் தமக்கு முதுகெலும்பாக விளங்கி வருவதாக தொகுதி வேட்பாளர் அய்மான் அதிரா சாபு கூறினார்.
நாங்கள் அனைத்து மாவட்ட வாக்களிப்பு மையங்களுக்கும் சென்றுள்ளோம். மேலும் கிராமங்களுக்குச் சென்று வட்டார தேர்தல் பணியாளர்களுடன் சந்திப்பு நடத்தினோம். அவர்கள் அனைவரும் முழு உத்வேகத்துடன் உள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் அனைவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்து வரும் இவ்வேளையில் தேர்தல் இயந்திரம் தொடர்ந்து உத்வேகத்துடன் இருப்பதை உறுதி செய்வது எனது கடமையாகும் என்று அவர் சொன்னார்.
தகவல்களை பெறுவதில் சமூக ஊடகங்களை பெரிதும் சார்ந்திருக்கும் தரப்பினரை இலக்காக கொண்டு சமூக ஊடகங்கள் வாயிலான பிரசாரத்தை தாம் இரட்டிப்பாக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


