ஷா ஆலம், நவ 17- இன்று பிற்பகல் 1.45 மணி நிலவரப்படி சிலாங்கூரிலுள்ள எட்டு ஆறுகளில் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ள நிலையில் இரு ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.
புக்கிட் சங்காங்கிலுள்ள சுங்கை லங்காட் மற்றும் ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள சுங்கை சிலாங்கூரில் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை கூறியது.
பெக்கான் மேருவிலுள்ள சுங்கை பிஞ்சாய், தாமான் டேசா கெமுனிங்கில் உள்ள சுங்கை ராசாவ், சுங்கை லங்காட், சுங்கை செமினி, சுங்கை காண்டீஸ், சுங்கை பெர்ணம், கிள்ளான் ஆற்றின் தாமான் ஸ்ரீ மூடா பகுதி, சுங்கை லாபு ஆகியவற்றில் நீரின் அளவு குறைந்துள்ளதாக அது தெரிவித்தது.
வெள்ள எச்சரிக்கை, வானிலை தொடர்பான தகவல்கள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் தொடர்பான விபரங்களுக்கு http://publicinfobanjr.water.


