ஈஜோக். நவ.15- 22 மாத ஆட்சிக்காலத்தில் உலக நாடுகளின் ஊழல் பட்டியலில் 62 இருந்த நாட்டை 52 இடத்திக்கு முன்னுக்கு கொண்டு வந்தோம். இந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஆட்சியை கைப்பற்றினால் இந்த பட்டியலில் முதல் 10 நாடுகளில் ஒரு நாடாக கொண்டு வர கடுமையாக பாடு படுவோம் என்று பலத்த கைத்தட்டலுக்கு கிடையில் கோல சிலாங்கூர் வேட்பாளர் சூளுரைத்தார்.
நம்பிக்கை கூட்டணி ஆட்சியின் போது 62 இடத்திலிருந்து 52 இடத்திக்கு உயர்த்தி வைத்திருந்தோம். ஆனால் இன்று தேசிய கூட்டணி மற்றும் தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் நாடு மீண்டும் 62 இடத்திக்கு தள்ளப் பட்டுள்ளது.
மீண்டும் இவர்களுக்கு வாக்களித்து நாட்டை பின்னுக்கு தள்ளப்போகிறீர்களா என்று சூள் வினய போது வந்திருந்த வாக்காளர்கள் வாக்களிக்க மாட்டோம் என்று உட்சாகத்துடன் கூறினர்.
ஊழலுக்கு எதிரான போட்டத்தை முடுக்கி விட முதலில் லஞ்ச ஒழிப்பு நிறுவனத்தை பிரதமர் துறை கீழ் இருந்து அகற்றி நாடாளுமன்ற சிறப்பு பிரிவின் கீழ் செயல் பட நடவடிக்கை எடுப்போம். இதன் வழி லஞ்ச ஒழிப்பு நிறுவனம் சுதந்திரமாக செயல் பட வாய்ப்பு ஏற்படுத்துவோம்.
லஞ்ச நடவடிக்கையில் ஈடு படும் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகள் கீழ் நிலை அதிகாரிகள் அம்பல படுத்த வழி வகுப்போம்.
இன்று கோல சிலாங்கூர் தொகுதியில் என்னோடு போட்டியிடும் சப்ரூல் செல்லும் இடமெல்லாம் பணத்தை வாரி இறைக்குறார். ஆனால் நான் இப்பகுதி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நல்ல சேவை வழங்கியுள்ளேன். தற்போது எனது சேவையை தொடரவே போட்டியிடுகிறேன்.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 10 வது பிரதமராக ஆவதற்கு 112 இடமாக கோல சிலாங்கூரை வெற்றி பெறச் செய்வோம் என்று அவர் பலத்த கைத்தட்டலுக்கு கிடையே கூறினார்.
செய்தி சுப்பையா சுப்ரமணியம்


