கோல சிலாங்கூர், நவ 15- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயாவை ஒரு தவணைக்கு ஆட்சிக்கு புரியும் வாய்ப்பு கிடைத்தால் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும்.
மாநிலத்தில் ஆட்சிபுரிந்த 22 மாதங்களில் 60 விழுக்காட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றியதன் அடிப்படையில் பக்கத்தான் ஹராப்பான் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளதாக கோல சிலாங்கூர் தொகுதிக்கான அக்கூட்டணியின் வேட்பாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
தேர்தல் கொள்கையறிக்கை என்பது 60 மாதங்களை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் 22 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தோம். அக்காலக்கட்டத்தில் தேர்தல் கொள்கையறிக்கையை அமல்படுத்துவதில் நமது அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
[caption id="attachment_474955" align="aligncenter" width="587"]
கோல சிலாங்கூர் தொகுதி வேட்பாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது[/caption]
ஆட்சியில் இருந்த 22 மாதங்களில் 60 விழுக்காட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். அதேசமயம் 60 மாதங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால் 100 விழுக்காட்டு வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருப்போம் என அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள புக்கிட் கூச்சிங் தெங்கா சமூக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் சுகாதார அமைச்சரான அவர், கடந்த 2018ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டங்களை தேசிய முன்னணி அரசு தொடர்ந்ததாக கூறினார்.


