ECONOMY

மக்கள் அனைவரும் பயனடையும் இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங், ஹராப்பான் பாரபட்சமானது  அல்ல என்பதற்கான சான்று 

15 நவம்பர் 2022, 6:24 AM
மக்கள் அனைவரும் பயனடையும் இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங், ஹராப்பான் பாரபட்சமானது  அல்ல என்பதற்கான சான்று 

உலு லங்காட், நவ 15: பக்காத்தான் ஹராப்பான் ஒருபோதும் பாரபட்சமானது அல்ல, மாறாக எல்லா வயதினரின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்பதை சிலாங்கூர் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐஎஸ்பி) நிரூபிக்கிறது.

இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றால், புத்ராஜெயாவை  வழிநடத்த, சிலாங்கூரின் அதே செயல்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்று உலு லங்காட் நாடாளுமன்ற ஹராப்பான் வேட்பாளர் கூறினார்.

"ஐஎஸ்பியின் கீழ் மொத்தம் 45 திட்டங்கள் மக்களுக்கு உதவுவதில் எந்த பாரபட்சமும் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. சிலாங்கூரில் குழந்தை பிறந்த 30 நாளில் இருந்து  80 வயது வரை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.

இன்று புக்கிட் மாகோத்தாவில் சிலாங்கூர் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வாக்களிக்கும் மாவட்ட குழுக்களுடன் நடத்திய சாதாரண அரட்டை நிகழ்ச்சியின் போது அவர் இவ்வாறு கூறினார்.

தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சானி, சிலாங்கூர் அரசு, மாநில  மக்களின் நலனுக்காக பெரிய அளவில் செலவளிக்கும் ஆற்றலை நிரூபித்துள்ளது என்றும், தேசிய அளவில் இதைச் செய்வது ஏன் சாத்தியமில்லை என்று கேட்டார்.

"வருடத்திற்கு 230 கோடி ரிங்கிட் பட்ஜெட்டில் சிலாங்கூர் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க முடியும் என்றால், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமரானால், கிட்டத்தட்ட RM 40,000 கோடி மத்திய பட்ஜெட்டில், நமது ஐஎஸ்பி திட்டத்தை மத்திய அரசால்  செயல் படுத்த முடியுமா அல்லது முடியாதா? நிச்சயமாக முடியும்" என்று அவர் கூறினார்.

டத்தோ ஜோஹான் அப்துல் அஜீஸ் (பிஎன்), டத்தோ மார்கிமான் கோபிரான் (பெஜுவாங்), டத்தோ டாக்டர் ராட்ஸி லத்தீஃப் (பிஎன்), டத்தோ அப்துல் ரஹ்மான் ஜாபர் (வாரிசன்) மற்றும் டாக்டர் முகமது முஸ்தபா (சுயேச்சை) ஆகியோருடன் சானி ஆறு முனை போட்டியை எதிர்கொள்கிறார்.

முன்பு IPR என்னும் திட்டத்திலிருந்து ஐஎஸ்பி மறுசீரமைக்க பட்டுள்ளது, RM 60 கோடி ஒதுக்கீடு மூலம் மக்கள் பராமரிப்பு திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது இன்னும் அதிகமான மக்கள் இந்த 44 திட்டங்களிலிருந்து பயனடைவார்கள்.

சமீபத்தில், மாநில அரசு சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்டத்தை (இன்சான்) அறிமுகப்படுத்தியது, இது 60 லட்சம் குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் இலவச காப்பீட்டுத் திட்டமாகும், இது பிரீமியம் செலவை முழுமையாக மாநில அரசே ஏற்கும். இது போன்ற திட்டங்கள் ஏன் மற்ற மாநிலங்களில் இல்லை? ஏன் மத்திய அரசால் அமல்படுத்த முடியவில்லை. மக்கள் நலனை மட்டும் மனதில் கொண்டுள்ள பக்காத்தான் ஹராப்பானால் மட்டுமே  இது முடியும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.