ஷா ஆலம், நவ 15- பக்கத்தான் கூட்டணி கடந்த 2008 ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றியது முதல் மாநில மக்கள் பல்வேறு வசதிகளையும் அனுகூலங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
இத்தகைய திட்டங்கள் காரணமாக சிலாங்கூர் மக்கள் மாநில அரசுக்கு ஒருமித்த ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவதாக கோத்தா ராஜா தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் முகமது சாபு கூறினார்.
மக்களின் ஆதரவு கடந்த 2013 ஆம் ஆண்டிலும் 2/18ஆம் ஆண்டிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களின் ஒருமித்த ஆதரவு மற்றும் தேர்தல் இயந்திரத்தின் அணுக்கமான ஒத்துழைப்பு காரணமாக கோத்தா ராஜா தொகுதி தொடர்ந்து பக்கத்தான் கூட்டணியின் கோட்டையாக விளங்கி வருகிறது என்றார் அவர்.
[caption id="attachment_474937" align="alignright" width="222"]
ரபிஸி ரம்லி[/caption]
பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவரான ரபிஸி ரம்லி நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த போதிலும் அவர் போட்டியிடும் பாண்டான் தொகுதியில் தொடர்ந்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்.
பாண்டான் தொகுதியில் முன்பு தொடங்கி அனல் பறக்கும் பிரசாரம் எப்போதும் நடைபெற்றதில்லை. நான் இத்தொகுதியில் அதிகமாக பிரசாரக் கூட்டங்களை நடத்துவதோ உரையாற்றுவதோ கிடையாது. பல்லின வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்றார் அவர்.
[caption id="attachment_474938" align="alignleft" width="199"]
கோபிந்த் சிங் டியோ[/caption]
டாமன்சாரா தொகுதியில் போட்டியிடும் கோபிந்த் சிங் டியோ இத்தொகுதியில் வெற்றி பெற்றால் சிறப்பான சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளார்.
பாசார் ஸ்ரீ செத்தியா, சுங்கைவே, மற்றும் சீ பார்க் மார்க்கெட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின் போது மக்கள் தெரிவித்த ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


