ஷா ஆலம், நவ 14- ஜோஹான் செத்தியா தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வெள்ள நிவாரண மையத்தில் தங்கியிருந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் இன்று காலை இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கம்போங் ஜோஹான் செத்தியா பள்ளிவாசல் மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கிள்ளான் நகராண்மைக் கழகம் கூறியது.
கடந்த 10 ஆம் தேதி முதல் அப்பள்ளியில் செயல்பட்டு வந்த துயர் துடைப்பு மையம் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு மூடப்படுவதாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
அந்த மையத்தில் உள்ள சமூக நலத்துறையின் பொருள்களை இடமாற்றம் செய்யும் பணியை நகராண்மைக் கழகம் மேற்கொண்டு வருகிறது என அது தெரிவித்தது.


