ECONOMY

வேட்பாளர்களின் பின்னணியை ஆராய்ந்து சேவையாற்றும் தலைவர்களை தேர்ந்தெடுப்பீர்- அம்பாங் மக்களுக்கு கோரிக்கை

14 நவம்பர் 2022, 4:57 AM
வேட்பாளர்களின் பின்னணியை ஆராய்ந்து சேவையாற்றும் தலைவர்களை தேர்ந்தெடுப்பீர்- அம்பாங் மக்களுக்கு கோரிக்கை

அம்பாங், நவ 14- வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களின் பின்னணியை நன்கு ஆராய்ந்து வாக்களிக்கும்படி அம்பாங் தொகுதி வாக்காளர்களை பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான டத்தோ ஜெரால்ட் ஹான்ஸ் ஐசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களுக்கான சேவைகளை முறையாகவும் நேர்மையான முறையிலும் ஆற்றக்கூடிய தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்படாமலிருப்பதற்கு இந்த அணுகுமுறை அவசியமாகும் என்று அவர் கூறினார்.

இது மிகவும் முக்கியமான தருணமாகும். சேவை செய்யக்கூடியவர்களுக்கு வாக்களியுங்கள். படங்களில் உள்ள முகங்களைப்  பார்த்தோ அறிமுகமானவர் என்ற காரணத்திற்காகவே வாக்களிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

வாக்களிப்பதற்கு முன்னர் நன்றாக யோசியுங்கள். வேட்பாளர்களின் பின்னணியை நன்கு ஆராயுங்கள். என்னைப் பொறுத்த வரை அம்பாங் தொகுதிக்கு சரியான வேட்பாளர் என்றால்  அது ரோட்சியா இஸ்மாயில்தான். வாக்குச் சீட்டில் இடம் பெற்றுள்ள முதல் வேட்பாளர் பக்கத்தான் ஹராப்பானின் ரோட்சியாதான் என்றார் அவர்.

அம்பாங் தொகுதி மக்கள் எதிர்நோக்கும் வேலை வாய்ப்பு, வீட்டுடமை, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன் ரோட்சியாவுக்கு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இப்போது வாக்குக்காக அனைவரும் மன்றாடுகிறார்கள். தேர்தலுக்குப் பின்னர் என்ன நடக்கும்? வெற்றி பெற்ற பிறகு மக்களை யார் கவனிக்கப் போகிறார்கள்?  வேலை கிடைப்பதில் பிரச்சனை, மோசமான பொருளாதாரம், வீட்டுடமைப் பிரச்னை போன்றவற்றுக்கு ரோட்சியாவால் தீர்வு காண முடியும் என அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.