கோம்பாக், நவ 13: இங்குள்ள கம்போங் இந்தியன் செட்டில்மெண்ட் பத்து 8 ல் 60 குடும்பங்கள் எதிர் கொண்டுள்ள நில உரிமைப் பிரச்சினையைத் தீர்க்க டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது அனுபவத்தைப் பயன்படுத்துவார்.
பக்காத்தான் ஹராப்பான் கோம்பாக் நாடாளுமன்றத்திற்கான வேட்பாளரும், டத்தோ மந்திரி புசாருமான அவர் பத்து கேவ்ஸில் ஏற்பட்ட நில பிரச்சனையை ஒரு முறை தீர்த்தார்.
இன்று அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், “எங்கே மேம்பாட்டுக்கு ஏற்ற இடம் என்பதை நாங்கள் மீண்டும் ஆராயலாம், குறைந்த பட்சம் இங்கு வசிப்பவர்கள் தங்கள் நிலத்தை உரிமையைப் பெற ஏற்றவாறு திட்டங்களை சீரமைக்கலாம்.
"உண்மையில் ஒரு திட்டம் இருந்தால், பத்து கேவ்ஸ் இந்திய குடியேற்ற கிராமம் போன்ற பிற நிலங்களுக்கு (குடியிருப்பவர்களை) நகர்த்தலாம்.

பள்ளி நிர்மாணத் திட்டத்தைச் செயல்படுத்த நில உரிமையாளர்களிடம் நிதி இல்லை என்பதை மாநில அரசு கல்வி அமைச்சகத்துடன் விவாதிக்கும் என்று அமிருடின் கூறினார்.
இதற்கிடையில், இந்த பிரச்சனையை இந்திய சமூகம் மட்டுமல்ல, நீண்ட காலமாக நிலத்தில் குடியிருக்கும் பல மலாய் குடும்பங்களும் அதே பிரச்சனையை எதிர்நோக்குவதாக அவர் விளக்கினார்.
கெ அடிலான் மக்கள் கட்சியின் உதவித் தலைவரான அமிருடின், கோம்பாக் நாடாளுமன்றத்திற்கான நான்கு முனை போட்டியை எதிர் கொண்டுள்ளார். தேர்தல் ஆணையம் வாக்குச் சீட்டில் அவருக்கு இரண்டாவது இடத்தை வழங்கியுள்ளது.


