கோம்பாக், நவ 13: ஒவ்வொரு குடிமகனும் உணரும் பலன்களுடன் கூடிய பல நலத்திட்டங்களை வழங்கும் அரசாங்கத்திற்கு சிலாங்கூர் ஒரு எடுத்துக்காட்டு என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கோம்பாக் நாடாளுமன்றத்திற்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர், பெறப்படும் ஒவ்வொரு வருமானமும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு உதவித் திட்டங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்றார்.
"சமீபத்தில் நாங்கள் சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்டத்தை (இன்சான்) அறிமுகப்படுத்தினோம், அதை யார் பெறலாம்? 30 நாள் குழந்தைகள் முதல் 80 வயது முதியவர்கள் வரை. அதில் பயனடையலாம்.

இத்திட்டத்தில் பதிந்துக் கொண்டவர்களுக்கு ஏதாவது நடந்தால், அவர்களுக்கு RM 10,000 பாதுகாப்பு உண்டு. அதை 60 லட்சம் சிலாங்கூர் குடிமக்களுக்கு வழங்கும் திட்டமாகும். மக்களுக்கு உதவ நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்," என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
மாநில அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் , கூட்டாட்சி மட்டத்திலும் செயல்படுத்த கோம்பாக் நாடாளுமன்ற வாக்காளர்கள் ஆதரவை வாக்கு சீட்டில், அவரது 2வது எண்ணுக்கு ஓட்டாக அளித்து ஆதரவு தர அமிருடின் கோரினார்.


