கோம்பாக், நவ 12- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை நன்கொடையாக அளிக்கும் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் முடிவு கோம்பாக் தொகுதி மக்களுக்கு அவர் நன்றி தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
மாநில அரசில் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை கோம்பாக் சமூக நிதியில் சேர்க்கப் போவதாக அமிருடின் கூறியுள்ளது நேர்மையுடன் சேவையாற்றும் தலைவர் அவர் என்பதை புலப்படுத்துகிறது என்று ரோஸ்மா ரோஸ்லான் (வயது 49) கூறினார்.
[caption id="attachment_474758" align="alignright" width="237"]
ரோஸ்மா ரோஸ்லான் (வயது 49)[/caption]
அமிருடின் நிச்சயமாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். அவர் அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் தலைவராவார். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் மந்திரி புசார் என்ற முறையிலும் அவர் நிறைய சேவைகளை ஆற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
வாக்காளர்களை போற்றி மதிக்கும் ஒரு தலைவராக விளங்கும் காரணத்தால் அமிருடின் நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என ரோஸ்மா நம்பிக்கையுடன் கூறினார்.
கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளரின் அந்த வாக்குறுதி மக்களின் நலனுக்காக பணத்தை தியாகம் செய்யும் நபர் என்பதை புலப்படுத்துகிறது ரெஸால் எலியாஸ் (வயது 43) கூறினார்.
[caption id="attachment_474760" align="alignleft" width="248"]
ரெஸால் எலியாஸ் (வயது 43)[/caption]
அமிருடின் வெறும் வாய்ச் சொல் வீரரல்ல. உண்மையில் மக்களுக்கு சேவையாற்றக்கூடியவர் என்பதை அவர் மந்திரி புசார் ஆனது முதல் செய்த மதிப்பீட்டின் அடிப்படையில் உணர்ந்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் சம்பளத்தை மக்களிடம் ஒப்படைக்க அவர் தயாராக உள்ளார். பணத்திற்காக வேலை செய்யும் தலைவர் அவர் அல்ல என்பதை இது உணர்த்துகிறது என்றார் அவர்.


