உலு சிலாங்கூர், நவ 12- உலு சிலாங்கூர் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால் அது முன்னெடுக்கும் திட்டங்களில் இலவச சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது ஆகியவையும் அடங்கும்.
தமது இந்த நீண்ட காலத் திட்டத்தின் மூலம் காப்புறுதி பாதுகாப்பை பெற இயலாத மக்களின் சுமையைக் குறைக்க இயலும் என்று தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கூறினார்.
இதன் காரணமாகவே இலவச மருத்துவ வசதி தேவை என்று நான் வலியுறுத்துகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீண்டகால அடிப்படையில் அதாவது 15 ஆண்டுகளில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.
நமக்கு மன உளைச்சல் குறையும். பிரச்சனைக்கு தீர்வு காணும் பட்சத்தில் நோய்கள் அண்டாது என்று ரவாங், சுங்கை சோ நடவடிக்கை அறையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கெஅடிலான் உறுப்பினராக இருந்து வரும் டாக்டர் சத்தியபிரகாஷ் இத்தேர்தலில் மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார்.


