உலு கிள்ளான், நவ 12- அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதற்கு மாநில அரசு எடுத்துள்ள முடிவை பொது மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இதன் மூலம் சமையல் பொருள்களை வாங்குவதற்கு உண்டாகும் செலவினத்தை குறைக்க முடியும் என்பதோடு தரமான உணவு மூலப்பொருள்களையும் வாங்க முடியும் என்று அவர்கள் கூறினர்.
இந்த விற்பனை மூலம் மலிவான விலையில் கோழி, அரிசி, முட்டை போன்ற பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக முன்னாள் தாதியான ஜமாலியா அபு சமா (வயது 65) கூறினார்.
[caption id="attachment_474713" align="alignright" width="206"]
ஜமாலியா அபு சமா (வயது 65)[/caption]
இந்த விற்பனைத் திட்டத்தை நீட்டிப்பதற்கு அங்கீகாரம் வழங்கிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஓய்வூதியப் பணத்தில் வாழ்க்கையை நடத்தும் எங்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக உள்ளது என அவர் சொன்னார்.
மாநில அரசின் இந்த ஏசான் ராக்யாட் திட்டம் தங்கள் பகுதியில் எப்போது நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள அதன் வியாபார இடங்கள் தொடர்பான அட்டவணையை தாம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தனித்து வாழும் தாயான ரோசிடா சீடேக் (வயது 43) தெரிவித்தார்.
[caption id="attachment_474714" align="alignleft" width="208"]
ரோசிடா சீடேக் (வயது 43)[/caption]
இந்த மலிவு விற்பனைத் திட்டத்தின் மூலம் சமையல் பொருள்களை வாங்குவதற்குரிய செலவினை கட்டுப்படுத்த முடிவதாக உணவகம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வரும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மலிவு விற்பனைத் திட்டம் தொடர்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்தாண்டு நோன்புப் பெருநாள் வரை இதனை நீட்டித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என அவர் கூறினார்.
[caption id="attachment_474715" align="alignright" width="186"]
மாட் யூசுப் யூனஸ் (வயது 68)[/caption]
அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் விற்பதன் மூலம் செலவினத்தைக் குறைக்க உதவிய மாநில அரசுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மாட் யூசுப் யூனஸ் (வயது 68) தெரிவித்தார்.


