கிள்ளான், நவ 11 - நவம்பர் 12ஆம் தேதி, சனிக்கிழமை நாளை நடைபெறவிருந்த செந்தோசா சட்டமன்றத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்திற்கான புதிய தேதியை செந்தோசா சட்டமன்ற சேவை மையம் விரைவில் அறிவிக்கும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு முதலில் உதவும் நோக்கில் செந்தோசா சட்டமன்றம் இந்நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளது.
செந்தோசா சட்டமன்ற குடியிருப்பாளர்களிடம் ஏற்பாட்டாளர் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள்.


