ஷா ஆலம், நவ 11- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் இளம் வாக்காளர்களைக் கவர்வதற்கு வேட்பாளரின் வயது ஒரு அளவுகோல் அல்ல என்று ஷா ஆலம் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் கூறுகிறார்.
குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு மட்டுமின்றி அனைத்து நிலையிலான மக்களுக்கு சேவையாற்றக்கூடிய தலைவர்களேயே மக்கள் விரும்புகின்றனர் என்று யூசுப் அஸ்லி சொன்னார்.
[caption id="attachment_474655" align="alignright" width="285"]
பக்காத்தான் ஹராப்பான் ஷா ஆலம் நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர் அஸ்லி யூசுப்[/caption]
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் தாம் ஷா ஆலம் வட்டாரத்தில் தாம் வசித்து வருவது இத்தொகுதி மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கான கூடுதல் அனுகூலமாக விளங்குவதாக 55 வயது நிரம்பிய அந்த வேட்பாளர் தெரிவித்தார்.
தேர்தலில் கடுமையாக பிரசாரம் செய்வது முக்கிய அம்சமாகும். இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்காகவும் போராட நான் உறுதிபூண்டுள்ளேன். வாக்காளர்கள் சிறந்த வேட்பாளரைத்தான் தேடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட பிரசாரத்தின் போது மக்கள் என்னை ஏற்றுக் கொண்டுள்ளதை உணர முடிகிறது. அவர்கள் என்னிடம் சகஜமாக பழகுகின்றனர் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள செக்சன் 19 அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இந்த தொகுதியில் போட்டியிடும் இதர மூன்று வேட்பாளர்களும் குறைந்த வயதுடையவர்களாக உள்ளது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.


