கோம்பாக், நவம்பர்.10- கோம்பாக் குடிமக்களுக்காக 5 ஆண்டுகளுக்கு 5 வாக்குறுதி களை இன்று கோம்பாக் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கினார்..
முதலாவதாக கோம்பாக் தொகுதி பொருளாதாரம், இரண்டாவதாக வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள், மூன்றாவதாக அடிப்படை வசதிகளுக்கான அடித்தளம் அமைப்பது, நான்காவதாக கல்வி வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருதல் மற்றும் ஐந்தாவதாக மாநிலத்தோடு சேர்த்து தொகுதியையும் மேம்படுத்துவதாகும் என்று அவர் தெரிவித்தார்.
இவை அனைத்தையும் நான் செய்து முடிக்க மக்கள் என்னோடு ஒன்று சேர்ந்து வரும் தேர்தலில் தனக்கு மீண்டும் வெற்றியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அந்த வேளையில் பொருளாதாரம், கல்வி, விளையாட்டுகள் ஆகியவற்றில் கோம்பாக் தொகுதி மக்கள் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
செய்தி ஆர்.பார்த்திபன்


