கோம்பாக், நவ 10: கோம்பாக் குடியிருப்பாளர்களின் தேவைக்காக இரண்டு திட்டங்களின் மூலம் 1,660 மலிவு விலை வீடுகள் கட்டப்படுவதை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதி செய்வார்.
பக்காத்தான் ஹராப்பான் கோம்பாக் நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர், தாமான் ஸ்ரீ கோம்பாக் இல் உள்ள பாயு குடியிருப்பு @செரி தெமெங்கோங் அபார்ட்மெண்ட் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் கூடியதாக இருக்கும் என்றார்.
கோம்பாக் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றால் அமிருடின் செயல்படுத்தும் சலுகைகளில்,‘’ கண்ணியமான கோம்பாக்’’ பிரகடனத்தில் இந்த உறுதிமொழி இணைக்கப்பட்டுள்ளது.


